கையில் காப்பு கயிறு காட்டுவதால் பயன் - aanmeegam tamil 10

கோவில்களில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு காப்பு கயிறு கட்டுகிறார்கள். மஞ்சள், சிவப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கலசமாக செயல்படுகிறது.

பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் காப்பு கயிறு அணியலாம். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.

காப்பு கயிறும் மந்திரத்தை ஈர்க்கும். நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.

காசி கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன் போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.

ஆண்கள் வலது கைகளிலும்,பெண்கள் இடது கைகளிலும் காப்பு கயிறைக் கட்டி கொள்ள வேண்டும்.

மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டுவதாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம்.

கருப்பு நிறக்கயிறை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.

ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ், அதிகாரம் சேரும்.